நாட்டில் உள்ள பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் SUV-க்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் கம்ஃபர்டபுல் மற்றும் ஸ்போர்ட்டி செடான்கள் கிட்டத்தட்ட மறக்கப்பட்ட செக்மென்ட்டாக மாறிவிட்டன.எனினும் Skoda Slavia மற்றும் VW Virtus செடான்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்த செக்மென்ட் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் செடான்கள் மீண்டும் பிரபலமடைந்து வருவது போல் தோன்றுகிறது. 2023-ல் வரவிருக்கும் டாப் 4 செடான்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
2023 ஹூண்டாய் வெர்னா : இந்த புதிய வெர்னா வெளிப்புறத்தில் பெரிய வடிவமைப்பு மாற்றங்களை பெறுகிறது, இது பிராண்டின் புதிய 'சென்சுவஸ் ஸ்போர்ட்டினஸ்' டிசைன் ஃபிலாஸஃபி அடிப்படையில் இருக்கும். இந்த புதிய வெர்னா ஸ்பிலிட் ஹெட்லேம்ப் அமைப்புடன் கூடிய பெரிய கிரில்லைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பின்புறத்தில் ஒரு ரிஃப்லெக்ட்டிவ் ஸ்ட்ரிப்புடன் இணைக்கப்பட்ட பின்புறத்தில், செடான் ஒரு பிரதிபலிப்பு துண்டு வழியாக இணைக்கப்பட்ட கோண LED டெயில் லேம்ப்ஸ்களை கொண்டிருக்கும்
இதன் பவர் ட்ரெய்னை பற்றி பேசுகையில், புதிய வெர்னா 1.5 லிட்டர் VTVT பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDI டர்போ டீசலுடன் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும் மைல்ட்-ஹைப்ரிட் டெக்னலாஜியை பெறலாம். கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இருக்கும். புதிய வெர்னா அடுத்த மாதம் உற்பத்திக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10-16 லட்சம் வரை இருக்கலாம்.
ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் : ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஐந்தாவது தலைமுறை ஹோண்டா சிட்டியை கடந்த ஜூலை 2020-ல் அறிமுகப்படுத்தியது. இப்போது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மூலம் ஹோண்டா சிட்டியானது காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் புதிய வேரியன்ட்களை பெறும். புதிய ஹோண்டா சிட்டியில் திருத்தப்பட்ட முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள், ஹெட்லைட்ஸ், ரீடிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்ஸ் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்கள் விருப்பங்கள் போன்ற சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்கள் இருக்கும். இந்த கார் வென்டிலேட்டட் சீட்ஸ், ADAS செயல்பாடு, மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பல கூடுதல் அம்சங்களையும் பெறும்.
புதிய ஹோண்டா சிட்டி பெட்ரோல்-ஒன்லி அல்லது பெட்ரோல்-ஹைப்ரிட் மாடல்களில் கிடைக்கும். புதிய ஹோண்டா சிட்டியானது 119 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். அதே நேரம் செடானின் ஹைபிரிட் வேரியன்ட்1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இது 124 பிஎச்பி ஆற்றலையும் 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.5 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் : மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2020-ல் இந்தியாவில் ஏ-கிளாஸ் செடானை அறிமுகப்படுத்தியது. இந்த செடான் சமீபத்தில் உலகளவில் ஒரு மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்டைப் பெற்றுள்ளது மற்றும் இந்தியாவில் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஏ-கிளாஸ் செடான் திருத்தப்பட்ட ஃப்ரன்ட் பம்பர், எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்களை பெறும். இந்த காரின் பின்புறத்தில் ரீடிசைன் டெயில் லேம்ப்ஸ் உள்ளன.
2023 ஏ-கிளாஸின் இன்டீரியர்பெரும்பாலும் மாறாமல் இருக்கும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதிய MBUX UI மற்றும் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனரை பெறும். தவிர லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆட்டோ பார்க் அசிஸ்ட் போன்ற டிரைவர்-அசிஸ்டென்ஸ் அம்சங்களையும் இது பெறும். பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பொறுத்தவரை, அதே 2.0-லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
வால்வோ எஸ்60 ஃபேஸ்லிஃப்ட் : இந்த பட்டியலில் உள்ள மற்றொரு சொகுசு செடான் Volvo S60 ஆகும். இந்த காரின் 2023 மாடலானது வெளிப்புற மற்றும் புதிய அம்சங்களுக்கான சிறிய காஸ்மெட்டிக் மேம்பாடுகளை பெறும். இந்த செடான் ரீடிசைன் செய்யப்பட்ட ஏர் இன்டேக்ஸ்களுடன் ஒரு ரிவைஸ்டு கிரில்லைப் பெறுகிறது. மேலும் எக்ஸாஸ்ட் பைப்ஸ் மற்றும் ரீடிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்ஸ் கொண்ட Rear apron-யை பெறுகிறது.
இந்த காரில் இன்பில்ட் கூகுள் மேப்ஸ், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் கொண்ட ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கும். வால்வோவின் புதிய S60 ஆனது 190bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். புதிய S60-க்கான விலை ரூ.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கலாம். Volvo S60காரானது BMW 5 சீரிஸ், Mercedes Benz E-Class மற்றும் Jaguar XF ஆகியவற்றுடன் தொடர்ந்து போட்டியில் உள்ளது.