பெரம்பலூரில் காதல் திருமணம் கண்ணை மறைத்ததால் பெற்ற தந்தையை தாயுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(47), இவரது மனைவி மலர்கொடி(45) இவர்களுக்கு வெங்கடேஷ்(24) என்ற மகன் உள்ளார். ராமகிருஷ்ணன் அதே பகுதியில் உள்ள சினிமா திரையரங்கில் வேலை செய்து வந்த நிலையில் தற்பொழுது வேலைக்கு செல்லாமல், குடி பழக்கத்திற்கும் அடிமையாகி, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இவரது மகன் வெங்கடேஷ் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து, வந்த நிலையில், தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த ராமகிருஷ்ணன், காதல் திருமணம் செய்து கொண்ட வெங்கடேசனை வீட்டிற்கு வரக்கூடாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி மலர்க்கொடியும் மகனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். மேலும் இவர்களுக்கு சொந்தமான ஓட்டு வீட்டையும் எழுதி தருமாறு, ராமகிருஷ்ணனிடம் கேட்டுள்ளனர். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பூலாம்பாடியில் இருந்து நேற்று பாரதிதாசன் நகரில் உள்ள வீட்டுக்கு வந்த வெங்கடேஷுக்கும், ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நேற்று காலையில் இருந்து இருவருக்கும் விட்டு விட்டு சண்டை நடந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இவர்களது தகராறில் காயமடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் பின்பகுதியில் சரிந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சண்டையின்போது ஏற்பட்ட சிறிய காயத்திற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று புற நோயாளியாக சிகிச்சை பெற்ற வெங்கடேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை தொடர்ந்து மலர்க்கொடியும் தலைவராகி விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது ராமகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் விரைந்து சென்று ராமகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அவரது மனைவி மலர்கொடி, மகன் வெங்கடேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Murder, Perambalur