முகப்பு /செய்தி /பெரம்பலூர் / சென்னையைப் போல பெரம்பலூரிலும் HAPPY Streets நிகழ்ச்சி- பரவசப்படுத்திய ஒன்றரை வயது குழந்தையின் ஆட்டம்...

சென்னையைப் போல பெரம்பலூரிலும் HAPPY Streets நிகழ்ச்சி- பரவசப்படுத்திய ஒன்றரை வயது குழந்தையின் ஆட்டம்...

குழந்தை - சபரி

குழந்தை - சபரி

Perambalur Happy Street | பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் காவல்துறை நல்லுறவை வளர்க்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Happy Street நிகழ்ச்சியில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் குத்தாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Perambalur, India

பெரம்பலூரில் மாவட்ட காவல் துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Happy Street நிகழ்ச்சி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என களைகட்டியது. பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் காவல் துறை இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நடைபெறுவதைப் போன்ற Happy Street நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்டத்திலும் நடத்த மாவட்ட காவல் துறை முடிவு செய்தது.

இதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாமளாதேவி தலைமையில் பெரம்பலூர் வெங்கடேசபுரம் திருச்சி சாலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தப்பாட்டம், பேண்ட் வாத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக நடனமாடினர்.

இதில் சபரி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை போட்ட ஆட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தப்பாட்டத்திற்கு ஏற்றவாறு குத்தாட்டம் போட்ட அக்குழந்தைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசும் வழங்கினார்.

' isDesktop="true" id="995746" youtubeid="-h9FF193IaI" category="perambalur">

தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் நடைபெறும் என அறிவித்த காவல் துறையினர், மனஅழுத்தத்தைப் போக்கும் வகையில் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்

செய்தியாளர்: ஆர்.ராஜவேல், பெரம்பலூர்.

First published:

Tags: Perambalur