முகப்பு /செய்தி /நீலகிரி / சாலையில் சுற்றித்திரியும் காட்டு மாடு... ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

சாலையில் சுற்றித்திரியும் காட்டு மாடு... ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

காட்டுமாடு

காட்டுமாடு

உதகை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு மாட்டை இடையூறு செய்த சுற்றுலா பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் காலையில் உலா வந்த காட்டு மாட்டை இடையூறு செய்யும் விதமாக சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக உதகை ,குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து நகர்ப்புறங்களில் இந்த காட்டு மாடுகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. குறிப்பாக உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு பகுதியில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்குள் இருந்து  வெளியேறிய காட்டு மாடு கூட்டம் பிரதான சாலையில் முகாமிட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று ஒற்றைக் காட்டு மாடு சாலையில் உலா வந்தது. இதை கண்டு சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் காட்டு மாடு அருகே சென்று புகைப்படம் செல்பி எடுத்து காட்டு மாட்டை தொந்தரவு செய்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் : அய்யாசாமி ( நீலகிரி)

top videos
    First published:

    Tags: Mettupalayam, Ooty, Tamil News