நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கருதப்படுவது முதுமலை தேசிய வனவிலங்கு பூங்கா. 321 கிலோமீட்டர் சதுர பரப்பளவு கொண்ட இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோ நிறுவனத்தின் மூலம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு விதமான தாவரங்கள் வனவிலங்குகள் உள்ளன.
ஊட்டியில் இருந்து முதுமலை வனவிலங்கு காப்பகத்திற்கு செல்வதற்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று கூடலூர் வழியாக செல்வது. மற்றொரு பாதை மிகவும் அபாயகரமான பாதையாக கருதப்படும் 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலை பாதை. சுற்றுலா பயணிகள் இந்த பாதையில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
புலி, சிறுத்தை, கரடி :
உதகையில் இருந்து உள்ளூர் வாகனங்களை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். முதுமலை செல்லும் பாதையில் யானை, புலி, சிறுத்தை, கரடி, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளை பார்க்க முடியும். பின்னர் தெப்பக்காடு ஆற்றங்கரையில் யானைகள் குளிப்பாட்டும் இடம் உள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடிய இடமாக உள்ளது.
ஜீப் சவாரி :
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் ஜீப் சவாரி செல்வதற்கு நபர் ஒன்றுக்கு 340 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ஜீப் சவாரியில் கண்டிப்பாக வனவிலங்குகளை பார்த்துவிட முடியும்.
பார்வையாளர் நேரம் :
காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் நடக்கும் இந்த சவாரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொள்கின்றனர். மேலும் மாலை 5 மணி முதல் 6:30 மணி வரையிலும், அருகே உள்ள யானைகளுக்கு உணவளிக்கும் முகாமில் யானைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதனை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் 30 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு அழகு கொண்ட இந்த சுற்றுலா தளம் கண்டிப்பாக வாழ்வில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தளமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris