முகப்பு /நீலகிரி /

பள்ளிகளுக்கு உணவு, புத்தகம் கொடுத்து உதவிய ஊட்டி பெண்கள் சமூக அறக்கட்டளை!

பள்ளிகளுக்கு உணவு, புத்தகம் கொடுத்து உதவிய ஊட்டி பெண்கள் சமூக அறக்கட்டளை!

X
நீலகிரி

நீலகிரி இளைஞர்கள் அறக்கட்டளை

Wdsa Trust Helping For Ooty School Students : உதவி தேவைப்படும் பழங்குடியின கிராமங்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்யும் பெண்கள் முன்னேற்ற சமூக அறக்கட்டளையினர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் முன்னேற்ற சமூக அறக்கட்டளை சார்பில் இன்று உதகை கிரீன் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள பிலோமினா பள்ளிக்கு மதிய உணவு மற்றும் புத்தகங்களைக் வழங்கினர். இந்த அறக்கட்டளையை சார்ந்த இளைஞர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் மக்கள் மற்றும் ஏழை,எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று மருத்துவ முகாம்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பழங்குடியினரின் பெண்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதே, இந்த அறக்கட்டளையின் நோக்கம் என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர்கள், உதவி தேவைப்படும் பழங்குடியின பெண்கள், தங்களை தொடர்பு கொண்டால் தங்களால் முடிந்த அளவு உதவிகளை பெற்றுத் தர முடியும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Nilgiris, Ooty