முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் தத்ரூபமாக காட்சியளிக்கும் மெழுகு சிலைகள்.. மறக்காம இந்த மியூசியத்துக்கு போயிட்டு வாங்க!

ஊட்டியில் தத்ரூபமாக காட்சியளிக்கும் மெழுகு சிலைகள்.. மறக்காம இந்த மியூசியத்துக்கு போயிட்டு வாங்க!

X
மெழுகு

மெழுகு சிலை அருங்காட்சியம்

Ooty museum | நீலகிரி மாவட்டம் ஊட்டி-கோத்தகிரி சாலையில் உள்ள 'மெழுகு உலகம்' எனும் அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்து மகிழ்ந்து வருகின்றனர். பூங்காக்கள், காட்சி முனைகள், அருவிகள் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா இடங்களும், கண்காட்சிகளும சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

அந்த வகையில் உதகை கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள 'மெழுகு உலகம்' எனும் அருங்காட்சியகத்தில் மெழுகினால் அமைக்கப்பட்ட காந்தி சிலை, சிலுவை சுமந்து செல்லும் இயேசு கிறிஸ்து, அன்னை தெரேசா, நேரு, அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களும் மற்றும் ஐ படத்தில் உள்ள விக்ரம், அந்நியன் பட விக்ரம் உருவம், சத்ரபதி சிவாஜி, சாய்பாபா உள்ளிட்ட பல்வேறு மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மெழுகு உலகம் அருங்காட்சியாகத்தின் அருகில் பேய் வீடு மற்றும் 3D தொழில் நுட்பத்தால் அமைக்கப்பட்ட வி.ஆர். கேம்ஸ் உள்ளிட்டவைகளும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்திழுக்கின்றன.

First published:

Tags: Local News, Ooty