முகப்பு /நீலகிரி /

குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் செல்லும் நீலகிரி கோடப்பமந்து கிராம மக்கள்!

குடிநீருக்காக உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் செல்லும் நீலகிரி கோடப்பமந்து கிராம மக்கள்!

X
குடிநீருக்காக

குடிநீருக்காக காட்டில் பயணம் செய்யும் மக்கள்

Nilgiris People Lifestyle | உதகையில் உள்ள மலை கிராமத்தில் குடிநீர் கிடைக்காததால் உயிரை பணயம் வைத்து காட்டிற்குள் சென்று இயற்கை ஊற்றுகளில் இருந்து தண்ணீர் சுமந்து வரும் கிராம மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை அருகே அமைந்துள்ள கோடப்ப மந்து 5 -ஆம் வார்டு எண்ணிற்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகரின் முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடந்த 40 ஆண்டு காலங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

உதகமண்டலம் நகராட்சி மூலம் வழங்கக்கூடிய குடிநீரானது தாழ் தள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எளிதாக குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், உயரமான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்காததால் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இயற்கை ஊற்றுகளின் மூலம் தொட்டிகள் அமைக்கப்பட்டு இரவு முழுவதும் காத்திருந்து குடிநீர் சேகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் வனப்பகுதிகளுக்குள் செல்லும்போது மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நவீன காலத்தில் இன்னும் ஒரு சொட்டு குடிநீருக்காக காட்டிற்குள் சென்று காத்திருந்து தண்ணீர் எடுத்து வரும் கிராம மக்களின் கதையை கேட்டால் கண்ணீர வரத்தான் செய்கிறது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

First published:

Tags: Local News, Ooty, Water Crisis, Water Scarcity