முகப்பு /நீலகிரி /

உயிர் பலி வாங்கும் மர்மம்.. நீலகிரி கல்லட்டி சாலையில் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி..

உயிர் பலி வாங்கும் மர்மம்.. நீலகிரி கல்லட்டி சாலையில் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதி..

நீலகிரி கல்லட்டி சாலை

நீலகிரி கல்லட்டி சாலை

Kallatty Road | பொக்கபுரம் திருவிழாவை முன்னிட்டு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல 5 நாட்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

தமிழகத்தில் உள்ள மலைப்பாதைகளில் மிகவும் அபாயகரமான சாலையாக கருதப்படுவது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி மலைப்பாதை. இந்த சாலையில் கடந்த 7 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் 117 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்த சாலை 42 விபத்துகளை ஏற்படுத்தி பல உயிர்களை காவு வாங்கியும் உள்ளது. தொடர் விபத்துகள் ஏற்படுவதன் காரணமாக இந்த சாலையில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது பொக்கபுரம் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் இந்த சாலையில் 2 நாட்களுக்கு மட்டும் வாகனங்கள் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மசினகுடி, மாவனலா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்திருந்தது. பொக்காபுரம் கோவில் திருவிழா கடந்த 25ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளூர் வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகிறது.

மேலும், வெளியூர் வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்கள் சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Nilgiris