முகப்பு /நீலகிரி /

வழக்கத்திற்கு மாறான வானிலை.. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனி!

வழக்கத்திற்கு மாறான வானிலை.. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனி!

X
ஊட்டி

ஊட்டி

Ooty : நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனி பொழிவு இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனியின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியதால், நீர்ப்பனி மற்றும் உறை பனிப் பொழிவும் சற்று தாமதமாகவே தொடங்கியது. பொதுவாக ஊட்டியில், நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் பாதி வரையிலும் நீர்ப்பனி அதிக அளவில் கொட்டித் தீர்க்கும். டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் உறைபனி அதிக அளவாக பெய்து கொண்டிருக்கும்.

ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு, உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனி மற்றும் உறைபனி மாறி மாறி பெய்து வருவதால், கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த காலநிலையானது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருந்தாலும், உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris