முகப்பு /நீலகிரி /

தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே மாணவி..

தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே மாணவி..

X
தமிழ்

தமிழ் இலக்கிய திறனறித்தேர்வில் வெற்றிபெற்ற மாணவி

TTSE Exam | கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற ஒரேயொரு மாணவி தனிஷா மட்டுமே. கூலித்தொழிலாளியின் மகளான இவரின் லட்சியம் ஐஏஎஸ் ஆவது மட்டுமே.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு (Tamil Talent Search Examination) கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி அடையும் 1,500 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழுடன் 2 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இத்தேர்வில்பங்கேற்க ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டினர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள காத்தாடி மட்டம் அரசு உயர்நிலை பள்ளியில் இருந்து 55 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும் நீலகிரி மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 957 மாணவர்கள் தேர்வு எழுதியநிலையில், காத்தாடி மட்டம் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவி தனிஷா மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் இருந்துதேர்ச்சி அடைந்துள்ளார்.

கூலித்தொழிலாளியின் மகளான தனிஷா, தான் ஐஏஎஸ் ஆவதே லட்சியம் என தெரிவித்தார். ஏழ்மை நிலையை சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பது தனிஷா குடும்பத்தாரின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் : வினோத்குமார் - நீலகிரி

First published:

Tags: Local News, Nilgiris