முகப்பு /நீலகிரி /

பழங்குடியினர் வாழ்வு முறையை விளக்கும் ஐலண்ட் அறக்கட்டளையினர்!

பழங்குடியினர் வாழ்வு முறையை விளக்கும் ஐலண்ட் அறக்கட்டளையினர்!

X
பழங்குடியினர்

பழங்குடியினர் உபயோகப்படுத்தும் அடுப்பு அவர்களது இசைக்கருவிகள்

Kothagiri Exhibition | கோத்தகிரியில் நடைபெற்ற காய்கறி கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

கோத்தகிரி  காய்கறி கண்காட்சியில் ஐலேண்ட் அறக்கட்டளையினர் சார்பில் பழங்குடியினர் வாழக்கூடிய குடிசை  காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உதகையில் அதிக அளவு பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். வாழ்க்கையுடன் ஒன்றி வாழும் அவர்களது வாழ்வு முறையை தெரிந்து கொள்ளும் விதமாக ஐலேண்ட் அறக்கட்டளையினர் பழங்குடியினர் வாழக்கூடிய குடிசையை கோத்தகிரியில் நடைபெற்ற காய்கறி கண்காட்சியில் அமைத்து வைத்திருந்தனர்.

மேலும் பழங்குடியினர் உபயோகப்படுத்தும் அடுப்பு அவர்களது இசைக்கருவிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. பருவநிலை மாற்றத்தை தடுக்கும் விதமாக பழங்குடியினர் வாழ்க்கை முறை சிறந்தது எனவும் ஐலேண்ட் அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கையுடன் ஒன்றி வாழ பழக வேண்டும் எனவும் பழங்குடியினர் வாழ்க்கை முறையை அனைவரும் தெரிந்து கொள்வது மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து பழங்குடியினர் கிராமத்திற்கு சென்று அவர்களுக்கு உதவி வழங்குவதை ஐலாண்ட் அறக்கட்டளையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ooty