முகப்பு /நீலகிரி /

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Ooty Botanical Garden | நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வார விடுமுறை நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள், வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை சுற்றுலாவை ஏராளமானோர் விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கோடை கால மலை சுற்றுலா தலங்களில் ஊட்டியானது சுற்றுலா பயணிகள் விரும்பும் முதன்மையான இடமாக இருந்து வருகிறது. சர்வதேச சுற்றுலா தலமான உதகையில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக உதகையில் பிரதான சுற்றுலா தலமான, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளின் வந்து செல்கின்றனர். கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வரத்தானது வார இறுதி நாட்களில் அதிகமாக இருப்பதால், நகரின் பிரதான சாலைகளான சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட், மணிக்கூண்டு சாலை, ஹில்பங் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

இதையும் படிங்க : மதுரையில் வருகிறது மெட்ரோ... பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட நிதியமைச்சர்...!

மேலும் வார இறுதி நாட்களில், உள்ளூர் மக்களும் அதிக அளவு நகர் பகுதிகளுக்கு வந்ஹது செல்வதால், மார்க்கெட் பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நகர்த்த சொல்லி காவல்துறையினர் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தடையை மீறி ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Nilgiris