முகப்பு /நீலகிரி /

கோடை விடுமுறையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. வாகன நெரிசலால் ஸ்தம்பித்த ஊட்டி!

கோடை விடுமுறையொட்டி உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. வாகன நெரிசலால் ஸ்தம்பித்த ஊட்டி!

X
உதகையில்

உதகையில் கடும் வாகன நெரிசல்

Ooty traffic | நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறையொட்டி உதகையில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

கோடை விடுமுறையை குடும்பங்களுடன் அனுபவித்து மகிழ உதகைக்குவரும் சுற்றுலாப் பயணிகளின் வரத்தால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.மேலும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் சார்பில்தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .இருப்பினும் வாகன நெரிசல் நகரை ஸ்தம்பிக்க வைக்கிறது .

வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்:

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தங்கள் தங்கும் விடுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு தமிழ்நாடு அரசு மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுற்று பேருந்துகளைப் பயன்படுத்தலாம் . இந்த பேருந்துகள், நகரின் முக்கிய சுற்றுலா தளங்களில் பார்க்க பெரும் உதவியாக இருக்கும். அதனால் வாகன நெரிசல் சற்று குறையும்.

இதையும் படிங்க | ஊட்டி மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம்... எந்த ஊருக்கு எந்த வழியில் போகலாம் - முழு விவரம் இதோ!

மேலும் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் வாகனங்கள் காட்டேறி பகுதியிலிருந்து மாற்று பாதையை உபயோகப்படுத்தி உதகை வந்தடையலாம் மற்றும் பெரும்பாலும் கூகுள் மேப் காட்டப்படும் பாதைகளானது சென்று சேரும் இடத்தின் தொலைவினை குறைக்குமே தவிர சாலை நன்றாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான் . எனவே அதனைத் தவிர்த்து காவல்துறை அறிவுறுத்தலுக்கு இணங்க வாகனங்களை இயக்கலாம்.

குறிப்பாக நகரின் பிரதான பகுதிகளில் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு போதிய பார்க்கிங் வசதிகள் இல்லாததால் நகருக்குள் வாகனங்களை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரின் பிரதான பகுதிகளான சேரிங் கிராஸ் முதல் படகு இல்லம் வரை உள்ள சாலைகளில் ஓரங்களில் வாகனங்களையும் நிறுத்தி வைக்க வேண்டாம் இவ்வாறு செய்வதன் மூலம் வாகன நெரிசலை சற்று கட்டுக்குள் கொண்டு வரலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித்தலமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.இதையடுத்து உதகையிலிருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்லவும் அதேபோல் சமவெளி பகுதிகளிலிருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் பர்லியார் குன்னூர் சாலையை பயன்படுத்தும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Ooty, Traffic