முகப்பு /செய்தி /நீலகிரி / ஊட்டி விலைவாசிக்கு கோடை வெயிலே பரவாயில்லை.. குமுறும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி விலைவாசிக்கு கோடை வெயிலே பரவாயில்லை.. குமுறும் சுற்றுலா பயணிகள்

உதகை போக்குவரத்து நெரிசல்

உதகை போக்குவரத்து நெரிசல்

கோடை சீசன் இந்த மாத முழுவதும் நடைபெறவுள்ளதால் பயணிகள் முகம் சுளிக்காமல் வந்து செல்ல சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படைத் தேவைகள் சரியான முறையில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். உள் மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களான கர்நாடக,கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதகை நகருக்குள் நுழையும் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சுற்று பேருந்து மூலம் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சுற்றுலா தளங்கள் அனைத்தும் நன்றாக பராமரித்து வந்தாலும் நகரில் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல், சாலை வசதி இல்லாததால் பல சுற்றுலா தலங்களை காண முடிவதில்லை எனவும் மேலும் தங்கும் விடுதிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகவும் இடைத்தரர்களின் தலையீடு உள்ளதால் இரண்டு நாட்கள் தங்கி சுற்றி பார்க்க நினைப்பவர்கள் ஒரே நாளில் திரும்பிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: மக்களே உஷார்” மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

குறிப்பாக நகரில் பல பகுதிகளில் உணவகங்களில் உணவுகள் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக கூறும் சுற்றுலா பயணிகள், நடுத்தர குடும்பங்கள் சுற்றுலாவிற்கு வருகை புரிந்தால் அவர்களால் தங்கும் விடுதிகளுக்கும் உணவகங்களில் உள்ள விலையேற்றமும்  நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக குற்றச்சாட்டியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் கோடை சீசனில் சுற்றுலா நகரில் நடைபெறும் அத்து மீறல்களை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை சீசன் இந்த மாத முழுவதும் நடைபெறவுள்ளதால் பயணிகள் முகம் சுளிக்காமல் வந்து செல்ல சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

top videos

    செய்தியாளர்: அய்யாசாமி (நீலகிரி)

    First published:

    Tags: Ooty, Tourism