முகப்பு /நீலகிரி /

மொத்தமாவே வெறும் 2 தியேட்டர்கள் தான்..! தமிழ்நாட்டில் குறைந்த திரையரங்குகள் கொண்ட மாவட்டம்..

மொத்தமாவே வெறும் 2 தியேட்டர்கள் தான்..! தமிழ்நாட்டில் குறைந்த திரையரங்குகள் கொண்ட மாவட்டம்..

X
மாதிரி

மாதிரி படம்

Nilgiris Cinema Theatres : தமிழ்நாட்டிலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது 2 திரையரங்குகள் மட்டுமே

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டம் சுற்றுலாவுக்கு புகழ்பெற்றது. மலை சுற்றுலா என்றாலே முதலில் நினைவுக்கு வரும் இடமாக இருக்கிறது இங்குள்ள ஊட்டி, இந்த மாவட்டத்தில் 2 சினிமா தியேட்டர் மட்டும்தான் இருக்கின்றன. இவை குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்வோம்.

தமிழ்நாட்டிலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது 2 திரையரங்குகள் மட்டுமே, மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் உதகையில் உள்ள 2 திரையரங்குகள் மட்டுமே சினிமா படங்கள் திரையிடப்படுகின்றன.

பொழுதுபோக்கிற்காகவும் சுற்றிப் பார்ப்பதற்காகவும் உதகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்த வண்ணமே உள்ளனர். ஆனால் இங்கு இருக்கும் சுற்றுலா தலங்களை எல்லாம் உள்ளூர் மக்கள் பெரிதும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், உள்ளூர் மக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றான இந்த 2 திரையரங்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதையும் படிங்க : அந்து பூச்சி பற்றிய ஆச்சர்ய தகவல்கள் தெரியுமா? அது இருக்கும் இடம் வளமாக இருக்குமாம்? 

அதேசமயம், இந்த 2 திரையரங்குகளும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயனுள்ளதாகவே அமைந்திருக்கின்றன. ஊட்டிக்கு கோடையில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் சினிமா பார்க்க வேண்டும் என்று நினைத்தால், தாவரவியல் பூங்கா அருகே உள்ள அசெம்பிளி ரூம்ஸ் எனப்படும் திரையரங்கத்திலும், உதகை மார்க்கெட் பகுதி அருகே அமைந்துள்ள கணபதி திரையரங்கத்திலும் சினிமா பார்க்கலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவற்றுள், அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கத்தில் புக் மை ஷோ செயலி மூலமாகவும், கவுன்டர் மூலமாகவும் டிக்கெட் பெறலாம். அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கத்தில் 2 காட்சிகள் திரையிடப்படுகின்றன. முதல் காட்சி மதியம் 2:30 மற்றும் மாலை 6:00 மணி காட்சிகளும் திரையிடப்படுகிறது. உதகை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கணபதி தியேட்டரில் மதியம் 12 மணி காட்சி மற்றும் பிற்பகல் 3 மணி காட்சி கடைசி காட்சியாக மாலை 7 மணி காட்சிகளும் இடம் பெற்றுகின்றன. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள், இந்த. நேரங்களில் தியேட்டருக்குச் சென்று திரைப்படங்களை பார்த்து என்ஜாய் பண்ணலாம்.

First published:

Tags: Cinema, Local News, Nilgiris