முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் சட்டென மாறிய வானிலை.. சுற்றுலா பயணிகளுக்கு செம குஷி..!

ஊட்டியில் சட்டென மாறிய வானிலை.. சுற்றுலா பயணிகளுக்கு செம குஷி..!

X
மாதிரி

மாதிரி படம்

Ooty Climate : நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த  நிலையில், அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய கனமழை பெய்தது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

கோடைகாலத்தில் சமவெளி பகுதிகளில் அதிக அளவில் வெயில், வாட்டி வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பரவலாக பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் தந்துள்ளது.

வார இறுதி நாட்களில் வெயிலின் தாக்கத்தை சற்று தனிப்பதற்காக உதகை வரும் சுற்றுலா பயணிகள் இந்த வானிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக உதகையிலும் வெயிலின் தாக்கமே இருந்து வந்தது இருப்பினும் சமவெளி பகுதிகளை காட்டிலும் இங்கு குளுமையான வானிலை நிலவி வந்தது.

கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நகரின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது . மேலும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

ஊட்டியில் திடீரென மாறிய வானிலை

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதகை வந்த சுற்றுலா பயணிகளுக்கு இது மிகவும் பிடித்தமான வானிலையாகஇருந்து வருகிறது. இருப்பினும் மழை பெய்யும் சமயங்களில் சுற்றுலா தலங்களில் சுற்றிப் பார்ப்பதற்கு சற்று சிரமமாகவே இருக்கும் மேலும் இரு சக்கர வாகனங்களில் உதகைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கு இது சற்று வருத்தம் தரக்கூடிய வானிலை ஆகவும் இருந்து வருகிறது.

    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty