தமிழ்நாட்டுல உயர்ந்த மலையை சுற்றிப் பார்க்கணுமா ஊட்டி பொட்டானிக்கல் கார்டன்ல இருந்து ஒரு 9 கிலோ மீட்டர் தூரத்துல இருக்க தொட்டபெட்டா தாங்க, உயரமான மலை சிகரம். நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ சுற்றுலா தலங்கள் இருந்தாலும் தொட்டபெட்டா மலை சிகரம் அப்படின்றது எல்லாருக்குமே கேள்விப்பட்ட பெயராவும், எல்லாரும் தெரிந்தஇடமாகவும்இருக்கும்.
விஜய் படத்துல கூட ஒரு பாட்டு வரும், 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட புரோட்டா' அந்த தொட்டபெட்டாவ தான் இப்ப நம்ம பாக்க போறோம். ஊட்டி கோத்தகிரி ரோட்ல இருக்க இந்த தொட்டபெட்டா மலைச்சிககரம், தமிழ்நாட்டிலேயே இரண்டாவது உயரமான மலைச்சிகரமாகும். வருஷத்துக்கு 125 சென்டிமீட்டர் மழையும் மேக்ஸிமம் 19 டிகிரி செல்சியஸ் மினிமம் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரைக்கும் இங்கே வெப்பநிலை பதிவாகும்.
இந்த தொட்டபெட்டா, ஏப்ரலில் இருந்து ஜூன் வரைக்கும் நீங்க பாக்குறதுக்கு ஏற்ற ஒரு சுற்றுலா தலம் அப்படின்னு சொல்லலாம். தொட்டபெட்டானு பேர் எப்படி வந்துச்சுன்னு கேக்குறீங்களா?, கன்னட மொழியில் தொட்ட அப்படின்னா பெரிய அப்படின்னு அர்த்தம் மற்றும் பெட்ட அப்படின்னா மலை அப்படின்னு அர்த்தம் இந்த ரெண்டையும் சேர்த்து காலப்போக்குல மருவி தொட்டபெட்டா அப்படின்னு பெயர் பெற்றது.
இந்த சுற்றுலா தலம் இன்னைக்கும் பல்வேறு சுற்றுலா தலங்கள்ல முக்கியமான சுற்றுலா தளங்களாவே இருந்து வருது. இந்த சுற்றுலா தலத்தை காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு, மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்துகிட்டே இருக்காங்க. அவங்க இந்த சுற்றுலா தலத்தை பற்றி பெருமையா சொல்றாங்க.
ALSO READ | முதுமலையில் Wild Life புகைப்படக்காரராக மாறிய பிரதமர் மோடி
இந்த சுற்றுலா தலத்துல டெலஸ்கோப் மூலியமா ஊட்டியோட மொத்த வியூவையும் நீங்க பார்க்க முடியும். மிஸ்டு இல்லாத வெயில் கிளைமேட்ல போனீங்கன்னா கண்டிப்பா நீங்க இந்த டெலஸ்கோப் மூலியமா ஊட்டியோட டவுன் வியூவ பார்க்கலாம். மற்றும் குன்னூரோட வியூவையும் இங்கிருந்து பார்க்கமுடியும்.
ரீசண்டா ஒரு சூசைட் நடந்ததுனால இங்க இருக்க சூசைட் பாய்ண்டை தடை செஞ்சிருக்காங்க. கோடை சீசன் துவங்குவதற்கு முன்னால அந்த இடத்தை சரி பண்ணி தடுப்பு கம்பிகள் அமைச்சு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கிறதுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வளவு அழகு மிக்க, குளிர்ச்சியும் நிறைந்த இந்த தொட்டபெட்டா மலை சிகரத்தை ஊட்டி வந்தால் கண்டிப்பா நீங்க மிஸ்பண்ணாம பாத்துட்டு போறதுக்கு ஒர்த்தானபிளேஸ்தாங்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris, Ooty