முகப்பு /செய்தி /நீலகிரி / உதகையில் மதுபான கடைகளில் திருடியவரை காலில் சுட்டுப்பிடித்த காவல்துறை

உதகையில் மதுபான கடைகளில் திருடியவரை காலில் சுட்டுப்பிடித்த காவல்துறை

சுட்டு பிடிக்கப்பட்ட சாம்பர் மணி

சுட்டு பிடிக்கப்பட்ட சாம்பர் மணி

சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை அருகே மதுபானக் கடைகளில் திருடியவரை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே குந்தலாடியில் உள்ள டாஸ்மாக் கடையில், அப்பகுதியைச் சேர்ந்த சாம்பார் மணி என்பவர் தொடர்ந்து திருடி வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல, நீலகிரி மாவட்டத்திலும், அதனை ஒட்டியுள்ள கேரளப் பகுதிகளிலும் மதுக்கடைகளுக்குள் புகுந்து மது பாட்டில்களை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த சாம்பார் மணி மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க: திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்... தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

சாம்பார் மணியை தமிழ்நாடு மற்றும் கேரள காவல் துறையினர் தேடி வந்த நிலையில், பந்தலூரில் பதுங்கி இருந்த அவரை நீலகிரி மாவட்ட காவலர்கள் சுற்றி வளைத்தனர். சாம்பார் மணியை கைது செய்ய முயன்றபோது அரிவாளைக் காண்பித்து மிரட்டியுள்ளார். இதனால், துப்பாக்கியால் காலில் சுட்டு சாம்பார் மணியை கைதுசெய்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

top videos

    செய்தியாளர்- அய்யாசாமி

    First published:

    Tags: Ooty