முகப்பு /நீலகிரி /

‘காந்தாரா’ பட பாணியல் ஊட்டியில் களைகட்டிய திருவிழா!

‘காந்தாரா’ பட பாணியல் ஊட்டியில் களைகட்டிய திருவிழா!

X
ஊட்டியில்

ஊட்டியில் திருவிழா

Ooty festival | ஊட்டியில் ‘காந்தாரா’ பட பானியல் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது நடைபெற்ற ‘தொம்பே குனிதா’ என்ற பாராம்பரிய நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர் திருவிழா காப்புக்கட்டுடன் தொங்கியது.

உதகையில் உள்ள மாரியம்மன் கோவிலில், ஏப்ரல் 18ஆம் தேதி திருக்கோவில் தேர் பவனி நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, பல்வேறு சமூகத்தினர் ஒவ்வொரு நாளும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் தேர்ப்பவனி மூலம் சுவாமியை பிரதான வீதி வழியாக கொண்டு சென்று மீண்டும் கோவிலை வந்தடையும் நிகழ்வு நடைபெறு வருகிறது.

இதன் ஒருபகுதியாக புலி வாகனத்தில் ஆதி பராசக்தி வடிவான தேவி, உலாவந்த தேர் பவணியானது, மேளதாளங்கள் முழங்க, உதகை மாரியம்மன் கோவிலில் இருந்து உதகை பேருந்து நிலையம் மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகள் வழியாக அழைத்துவரப்பட்டது.

அப்போது, ‘தொம்பே குனிதா’ எனப்படும் பாரம்பரிய முறை மற்றும் கேரள மேளங்கள் முழங்க, தேர் பவனி வந்தது காந்தாரா பட பானியில் நடைபெற்ற ‘தெம்பே குனிதா’ எனும் ஊர்வலம் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.

மேலும், இதில் ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த பண்டிகையானது. ஊட்டியில் நடைபெறும் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாகும்.

top videos
    First published:

    Tags: Car Festival, Festival, Local News, Nilgiris, Ooty