முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் புதுமணத்தம்பதியரை கவரும் தேயிலை பூங்கா.. இங்க என்ன ஸ்பெஷல்?

ஊட்டியில் புதுமணத்தம்பதியரை கவரும் தேயிலை பூங்கா.. இங்க என்ன ஸ்பெஷல்?

X
உதகை

உதகை - தேயிலை பூங்கா

Ooty Tourist Spot | ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குடும்பத்தோடு சென்று விளையாடி மகிழ்வதற்கு ஏற்ற இடம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள் அனைவரும் அறிந்த சுற்றுலா தளங்களாக இருக்கின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு மகிழ ஒரு அழகிய சுற்றுலா தலம் உதகை - கோத்தகிரி சாலையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தை தாண்டி மைநலா கிராமத்திற்கு முன்னர் இருக்கிறது.

அதுதான் தேயிலை பூங்கா. அதிகம் அறியப்படாத சுற்றுத்தலமான இந்த தேயிலை பூங்காவுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், புகைப்பட கருவிகளுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உள்ளே குழந்தைகள் விளையாடுவதற்கு பிரத்யேகமான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுமணத்தம்பதியர் அதிகம் விரும்பும் பூங்காவாகவும் இது உள்ளது. இங்குள்ள சூழல் புகைப்படங்கள் எடுக்க அருமையான காட்சிப்பரப்புகளை வழங்குகிறது.

மேலும் படிக்க :  வனவிலங்குகளை காண ஜீப் சவாரி.. சுற்றுலா பயணிகளை கவரும் முதுமலை..

மேலும் ஓய்வுக்காக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக இந்த இடத்தை கண்டு மகிழ்ந்து செல்லலாம். மறக்காம இந்த இடத்திற்கு குழந்தைகளுடன் சென்று என்ஜாய் பண்ணுங்க.

First published:

Tags: Local News, Nilgiris, Tourism