முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் சூரியன் உதித்து, மறைவது இவ்வளவு அழகா இருக்குமா? சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!

ஊட்டியில் சூரியன் உதித்து, மறைவது இவ்வளவு அழகா இருக்குமா? சுற்றுலா பயணிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!

X
ஊட்டியில்

ஊட்டியில் சூரியன் மறையும் காட்சி

Nilgiri News | ஊட்டியில் நவம்பர் முதல் மார்ச் வரை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவது மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு வருடம் முழுவதும் குளிர்ச்சி நிலவும் தட்பவெப்பத்தை கொண்டுள்ளது. இந்த மலைப்பகுதி உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளை தன்னகத்தே ஈர்க்கிறது. அவ்வாறு ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்கள், அதிகம் பிரபலமான இடங்களை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிச் செல்கின்றனர்.

ஆனால் இங்கே வியப்பூட்டும் அழகு நிறைந்த ஏராளமான இடங்களும் இருக்கின்றன. இப்படிப்பட்ட இடங்களை பார்த்து ரசிப்பது உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியையயும், நீங்காத நினைவையும் கொடுக்கும். அந்த வகையில் அருவிகளும், வீயூ பாயின்ட்களும், அடர்ந்த வனப்பகுதியும் உங்களை மெய்மறக்கச் செய்யும்.

இந்நிலையில், உதகையில் பெரும்பான்மையான நாட்களில் மழை மற்றும் மிதமான வானிலை காணப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் முதல் உரை பனி மற்றும் நீர் பனி தாக்கம் இரவு நேரங்களில் அதிகரித்து காணப்படும். பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயில் நிலவும். நவம்பர் முதல் மார்ச் வரை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவது மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். இந்த காட்சி சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் வாசிகளையும் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும்.

First published:

Tags: Local News, Nilgiris