முகப்பு /நீலகிரி /

தென்னிந்தியாவின் முதல் தேயிலை கண்காட்சி..! குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

தென்னிந்தியாவின் முதல் தேயிலை கண்காட்சி..! குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

X
குன்னூர்

குன்னூர் சிம்ஸ் பூங்கா

Tea Fair At Coonoor Sims Park : நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக 2 நாட்கள் தேயிலை கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்றது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி முதல்முறையாக நடைபெற்று வருகிறது. இந்த தேயிலை கண் பற்றிய பல்வேறு நிறுவனங்களை சார்ந்தவர்களும் இங்கு குடிகள் அமைத்து தேயிலை பற்றி சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.

மினியேச்சர் இயந்திரம்

தேயிலை ஆரம்பம் முதல் இறுதியாக தூள் ஆக மாறுவது வரை மினியச்சர் வடிவில் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலில் தோட்டங்களில் இருந்து பறிக்கப்பட்ட தேயிலை ஆனது முதலில் இயந்திரத்தில் நன்கு வாட்டி எடுக்கப்படுகிறது. பின்னர் அடுத்ததாக உள்ள இயந்திரம் மூலம் ரோலிங் செய்யப்படுகிறது.

30 முதலிருந்து35 நிமிடம் வரை ரோலிங் செய்யப்பட்ட பின்னர் ஆக்ஸடேசன் செய்வதன் மூலம் பச்சை இலை ஆனது நன்கு காய்ந்து அரைப்பு நிலைக்கு வருகிறது. பின்னர் இறுதியாக மற்றொரு இயந்திரத்தில் இந்த இலைகளை வைத்து அரை மணி நேரம் மறைப்பதன் மூலம் டீ தூள் கிடைக்கிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty