முகப்பு /நீலகிரி /

உதகையில் சிறுமிகளுக்கு சிலம்பம் பயிற்றுவிக்கும் சிலம்ப ஆசிரியர்

உதகையில் சிறுமிகளுக்கு சிலம்பம் பயிற்றுவிக்கும் சிலம்ப ஆசிரியர்

X
சிறுமிகளுக்கு

சிறுமிகளுக்கு சிலம்பம் பயிற்றுவிக்கும் சிலம்ப ஆசிரியர்

Ooty : ஊட்டியில் சிலம்பம் கலையில் ஆர்வம் செலுத்தும் மாணவர்கள்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

சிலம்பம் என்பது தமிழர்களின் பண்டைய பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு மிக்க சிலம்பத்தை உதகை போன்ற மலை மாவட்டங்களில் பயில்வது சற்று ஆச்சரியமானதாகவே இருந்தாலும் பெரும்பாலும் இதுபோன்ற பாரம்பரிய கலைகளை குளிர் நிறைந்த நீலகிரி மாவட்டங்களில் கற்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

சமீபகாலமாக சிலம்பம் பயில்வதில் உதகை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு இக்கலையை பற்றி தெரிந்து கொண்டு அதை ஊக்குவிக்கும் வகையிலும் பாரம்பரிய கலையான சிலம்பம் குறித்து அனைவரும் புரிந்து, அந்த கலை குறித்த விழிப்புணர்வை அனைவரிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், உதகையில் உள்ள பார்த்திபன் எனும் சிலம்பக்கலை ஆசிரியர் மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்றுவித்து வருகிறார்.

சிறுமிகளுக்கு சிலம்பம் பயிற்றுவிக்கும் சிலம்ப ஆசிரியர்

இவரிடம் சிலம்பம் பயின்ற சிறுமிகள் கடந்த சில காலங்களாக சிலம்பத்தை ஆர்வமாக பயின்று வருகின்றனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் சிலம்பம் கற்க ஊக்குவிப்பதாகவும் ஆசிரியர் பார்த்திபன் தெரிவிக்கிறார். சிலம்பத்தில் ஆர்வம் கொண்ட இந்த சிறுமிகள் யுனிவெர்சல் அர்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் எனும் அமைப்பின் மூலமாக, மொபைல் செயலி மூலம் அரை மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த முயற்சியானது தற்போது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலம்பம் பயின்ற மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இந்த கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும், இதன் மூலம் பல்வேறு சாதனைகள் படைப்போம் என்று ஆர்வத்துடன் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Local News, Nilgiris, Ooty