முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் ஸ்ரீபலராமர் தேர் திருவிழா கோலாகலம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..

ஊட்டியில் ஸ்ரீபலராமர் தேர் திருவிழா கோலாகலம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..

X
ஊட்டியில்

ஊட்டியில் ஸ்ரீபலராமர் தேர் திருவிழா

Shri Balaram Chariot Festival 2023 in Ooty | நீலகிரி மாவட்டம் உதகையில் ஸ்ரீ கிருஷ்ண பலராமர் தேர்ப்பவனி உலா நடைபெற்றது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ( ISKCON ) சார்பில் ஸ்ரீகிருஷ்ண பலராமர் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் பவனியானது உதகை ஐந்துலாந்தர் பகுதியில் துவங்கி லோயர் பஜார், மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார், காபி ஹவுஸ் வழியாக சென்று ஸ்ரீனிவாச பெருமாள் மண்டபத்தில் நிறைவடைந்தது.

இந்த தேர்பவனியில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ஸ்வாமிஜி மற்றும் உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ், பாஜக நகர செயலாளர் சுரேஷ்குமார், பாஜக நகர நிர்வாகி சபரிஷ், பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் பிரேம்யோகன், சேவா சங்கம் பிரகாஷ், ஐயப்பன் சங்கம் நிர்வாகி, தோடர் சமுதாய நிர்வாகி மற்றும் ஏராளமான இந்து அமைப்புகள் நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஊட்டியில் ஸ்ரீபலராமர் தேர் திருவிழா கோலாகலம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் ஏரளமான பக்தர்கள் ஊர்வலத்துடன் அனைவரும் “ஹரே ராம, ஹரே கிருஷ்ணா” என்று ஸ்லோகங்களுடனும் பக்தி பாடல்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

First published:

Tags: Local News, Nilgiris