முகப்பு /நீலகிரி /

வணிகர் தினத்தை முன்னிட்டு உதகையில் கடையடைப்பு.. சுற்றுலா பயணிகள் அவதி..

வணிகர் தினத்தை முன்னிட்டு உதகையில் கடையடைப்பு.. சுற்றுலா பயணிகள் அவதி..

X
வணிகர்

வணிகர் தினத்தை முன்னிட்டு உதகையில் கடையடைப்புஉதகையில் கடையடைப்பு

Ooty Market : வணிகர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரதான பகுதியான மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

இன்று (மே 5-ம் தேதி) வணிகர் மாநாடு நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என்று வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன் எதிரொலியாக நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரதான பகுதியான மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும்அடைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கிராமப் பகுதிகளில் இருந்து நகருக்கு தகவல் தெரியாமல் வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாலை வரை காத்திருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டி இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உதகையில் கடையடைப்பு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நகருக்கு வெளியில் உள்ள உணவகங்கள் மற்றும் வணிக கடைகள் மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Local News, Nilgiris