முகப்பு /நீலகிரி /

கோடைக்கு தயாராகும் ஊட்டி.... உதகை ரோஜா பூங்காவில் கிடு கிடுவென நடக்கும் சுற்றுச்சுவர் சீரமைப்பு பணி!..

கோடைக்கு தயாராகும் ஊட்டி.... உதகை ரோஜா பூங்காவில் கிடு கிடுவென நடக்கும் சுற்றுச்சுவர் சீரமைப்பு பணி!..

X
உதகை

உதகை ரோஜா பூங்கா

Ooty Rose Garden | கடந்த ஆண்டு பெய்த பருவமழையின்போது உதகை சுற்று வட்டார பகுதிகளின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன.

கோடையில் இளைப்பாற நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த பருவமழையின்போது உதகை சுற்று வட்டார பகுதிகளின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன.இவ்வாறு இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்கள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக உதகையில் பயணிகளை வெகுவாக கவரக்கூடிய பிரதான சுற்றுலா தளமான ரோஜா பூங்காவின் தடுப்புச் சுவரானது கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது இடிந்து விழுந்தது. தற்போது கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில், இந்த தடுப்பு சுவரை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, ரூ. 24 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. வேகமாக நடைபெற்று வரும் இந்த பணியானது, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Local News, Ooty