முகப்பு /செய்தி /நீலகிரி / ஊட்டிக்கு இனி சிரமமின்றி போகலாம்.. சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்! 

ஊட்டிக்கு இனி சிரமமின்றி போகலாம்.. சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்! 

ஊட்டி

ஊட்டி

ooty : நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி மலைப்பாதையில் பயணிக்கலாம். 

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை ஒட்டி சாலை பணிகள் கிடுகிடுவென நடைபெற்று வருகின்றன. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஊட்டி வரை செல்ல கூடிய பிரதான சாலையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள், உள்ளூர் வாகனங்கள், போருந்து மற்றும் லாரிகல் என ஏராளமான வாகனங்கள் நாள்தோரும் சென்று வருகின்றன. இதனால், குன்னூர் முதல் உதகை வரை செல்ல கூடிய சாலையில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படித்தும் விதத்தில், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து உதகை செல்ல உள்ளூர் மக்கள் கோத்தி பாலடா சாலையை அதிக அளவு பயன்படுத்தி வந்தனர்.

ஊட்டியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகள்

இந்நிலையில், இந்த சாலையானது காட்டேரி அணை வழியாக கேத்தி பாலடா வந்து  கொல்லிமலை காந்திபேட்டை உள்ளிட்ட வழியாக உதகை வந்தடையும் மற்றும் கேத்தி பாலடாவிலிருந்து சாந்தூர் வழியாக எல்லனள்ளி பகுதிகளை சென்று சேர்கிறது. இந்த பாதை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த மாற்று பாதையை சுற்றுலாபயனிகல் மற்றும் உள்ளூர் வாசிகள் உபயோகிப்பதன் மூலம், உதகை குன்னூர் சாலையில் சற்று வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேடை சீசனை முன்னிட்டு, வேகமாக நடைபெறும் இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    First published:

    Tags: Local News, Nilgiris