முகப்பு /நீலகிரி /

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆண்டு விழா - உதகையில் ஏழை மக்களுக்கு நல திட்ட உதவிகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆண்டு விழா - உதகையில் ஏழை மக்களுக்கு நல திட்ட உதவிகள்

X
ராமகிருஷ்ண

ராமகிருஷ்ண பரமகிருஷ்ண விழா

Nilgiri district | ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆண்டு விழாவை முன்னிட்டு உதகையில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மடத்தில் ஏழைகளுக்கு போர்வைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Neelambur, India

விவேகானந்தரின் குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்தநாளை முன்னிட்டு உதகையில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தில் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமம் மற்றும் நகர்புறங்களில் உள்ள மக்கள் பங்கேற்றனர். இதில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மதிய உணவு கொடுத்தும்விழா விமர்சியாக நடைபெற்றது.

ஆர்.கே.புரம் அருகே அமைந்துள்ள இந்த ராமகிருஷ்ண மடத்தில் பஜனை பாடல்கள், தமிழ் சொற்பொழிவுகளுடன் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர, பல்வேறு நாடக மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற்றது. பின்னர் குளிர் காலத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு போர்வைகளும் வழங்கப்பட்டன.

First published:

Tags: Local News, Nilgiris