முகப்பு /செய்தி /நீலகிரி / தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் கேழ்வரகு - நீலகிரியில் தொடக்கம்

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் கேழ்வரகு - நீலகிரியில் தொடக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி(கேழ்வரகு) வழங்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் நாளை தொடங்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு மத்திய உணவுக் கழகத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளதாகவும், அதில் நீலகிரி மாவட்டத்திற்கு மாதத்திற்கு 400 மெட்ரிக் டன் தேவை. ஆனால் தற்போது 482 மெட்ரிக் டன் கேழ்வரகு இருப்பு வைத்துள்ளதாகவும் இத்திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் 2.29 லட்ச குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ ராகி வழங்கபடும் என்றார்.

தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யும் அளவுக்கு ராகி இல்லாததால் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் முதல் முறையாக தொடங்கபடுவதாகவும் பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தபடும் என்றார்.

கூட்டுறவு துறை மூலம் சிறு தானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வேளாண் துறையுடன் இணைந்து சிறு தானியம் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Ration Shop