முகப்பு /நீலகிரி /

ஊட்டிக்கு டூர் போக திட்டமா? நீலகிரியில் வானிலை எப்படி இருக்கு?

ஊட்டிக்கு டூர் போக திட்டமா? நீலகிரியில் வானிலை எப்படி இருக்கு?

X
ஊட்டிக்கு

ஊட்டிக்கு டூர் போக திட்டமா?

Nilgiris Climate | ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் முன் அங்கு இருக்கும் காலநிலை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் உறைபனியின் தாக்கம், நீர்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. வழக்கமாக நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் மட்டுமே உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாத இறுதி வரையில் உரை பணி அதிகரித்து காணப்பட்டது. இதனால் உள்ளூர் வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தற்போது உரை பனி மற்றும் நீர் பனியின் தாக்கம் குறைந்துள்ளது.

இருப்பினும் ஒரு சில நாட்களில் வானம் கடும் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. கடும் மேகமூட்டம் நிலவும் நேரங்களில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனத்துடனே இயக்க வேண்டும். கடும் மேகமூட்டம் நிலவும்போது அருகே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்படும். எனவே வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்.

களைகட்டும் கோடை சீசன் :

கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் கோடை சீசன் தற்போதே களைகட்ட துவங்கி உள்ளது. சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த சீதோஷ்ண நிலையானது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடியதாக உள்ளது. உதகை வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களுடன் சீதோஷ்ண நிலையையும் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Nilgiris, Travel