முகப்பு /நீலகிரி /

சுற்று பேருந்து திட்டத்தால் பரிதவிக்கும் உதகை மக்கள்..

சுற்று பேருந்து திட்டத்தால் பரிதவிக்கும் உதகை மக்கள்..

X
மாதிரி

மாதிரி படம்

Ooty Bus Issue : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்று பேருந்து திட்டத்தால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன தற்போது உதகைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால், உள்ளூர் பேருந்துகளை சுற்று பேருந்துகளாக மாற்றி இயக்கப்பட்டு வருகின்றன.இதனால் கோத்தகிரி குன்னூர் மற்றும் உதகையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளை சுற்று பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.

சுற்று பேருந்துகளானது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பேருந்துகளாக இருந்தாலும் உள்ளூர்வாசிகளுக்கு பேருந்து இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

உதகையில் பல்வேறு கண்காட்சிகளை கண்டு ரசித்து மகிழ சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தருவதால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசலும் நிலவி வருகிறது.

சுற்று பேருந்து திட்டத்தால் பரிதவிக்கும் உதகை மக்கள்

இந்த வாகன நெரிசல் காரணமாக சுற்றுலாவிற்கு சென்ற பேருந்துகள் பேருந்து நிலையம் வந்தடைய வெகு நேரம் ஆகிறது இதனால் உள்ளூர் மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் வராமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளதுமேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் உள்ளூர் பயணிகளுக்கு இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும் என உள்ளூர் வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் உள்ளூர் வாசிகள் தங்களது கிராமங்களுக்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலையே ஏற்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே அமர்ந்து மற்றும் படுத்திருந்தும் கூட பேருந்துக்காக காத்திருக்கிறார்கள். அதேபோல் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கூட பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் நிலவி வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அரசாங்கம் இதனை கவனத்தில் கொண்டு தங்களுக்கு போதிய பேருந்து வசதியை இயக்க வேண்டும் என உள்ளூர் வாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    First published:

    Tags: Local News, Nilgiris