முகப்பு /நீலகிரி /

ஊட்டிக்கு போய் சேர்ந்தா போதும்டா சாமி.. பேருந்தில் இடம் பிடிக்க பாடாய்படும் பயணிகள்..

ஊட்டிக்கு போய் சேர்ந்தா போதும்டா சாமி.. பேருந்தில் இடம் பிடிக்க பாடாய்படும் பயணிகள்..

X
ஊட்டி

ஊட்டி

Ooty Bus Issue : கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு செல்ல மக்கள் பல்வேறு  சிரமங்கள் சந்திக்கின்றனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. பெரும்பாலும் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக மேட்டுப்பாளையம் சென்று தான் உதகை வர வேண்டும். இப்படி இறுக்கும் சூழலில் மேட்டுப்பாளையத்திலிருந்து பேருந்தில் இடம் கிடைப்பது என்பது கூடுதல் சவால். ஏனெனில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரைசெல்ல கூடிய பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

மேலும் மலைகளின் நடுவே குடைந்து எடுக்கப்பட்ட பாதையில் வளைவுகள் அதிகம் என்பதால் புதிதாக மலை பயணம் மேற்கொள்பவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல் உள்ளிட்டவை ஏற்படலாம். அதனாலயே பேருந்தில் ஜன்னல் இருக்கைக்கு சண்டையிட்டு கொள்வர்.

பேருந்தில் இடம் பிடிக்க பாடாய்படும் பயணிகள்

இந்நிலையில், தற்போது ஊட்டி போனால் போதும் என நின்று கொண்டு கூட பயணம் செய்ய முன் வந்துள்ளனர். இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் மேட்டுப்பாளையம் வரும் முன்னரே நிரம்பி விடுகின்றன. மேலும் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி உதகை, குன்னூர் செல்ல வேண்டிய பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதையும் படிங்க : இனி ஊட்டி, கொடைக்கானலுக்கு போக வேண்டாம்.. திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் வியூ பாயிண்ட் அமைக்க திட்டம்!

இந்த பிரச்சனையை போக்குவரத்து நிர்வாகமும் சரிவர கண்டு கொள்ளாததால் சரியான வரிசையின்றி முடிந்தவர்கள் சீட்டு பிடித்தும், முதியவர்கள் காத்திருந்தும் பயணம் செய்கின்றனர். எனவே முறையான வரிசையில் பயனிகளை அனுமதிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty