முகப்பு /நீலகிரி /

உதகையில் ஆஸ்கர் தம்பதியினருக்கு பாராட்டு விழா!

உதகையில் ஆஸ்கர் தம்பதியினருக்கு பாராட்டு விழா!

X
ஆஸ்கர்

ஆஸ்கர் தம்பதி

Ooty oscar couple | தி எலிபேண்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படம் என்ற ஆஸ்கர் விருதை தட்டிசென்றது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரியில் ஆஸ்கார் விருது பெற்ற தம்பதியினருக்கு  சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக கௌரவிப்பு விழா நடைபெற்றது. 

இந்த வருடம் இந்தியாவை சேர்ந்த 2 படைப்புகளுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. முதலாவது, அதிகம் அறியப்பட்ட ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ பாடல். இரண்டாவது ’தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்தது.

இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பினுடைய பொதுக்குழு கூட்டமானது முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் உள்ள வனத்துறையினர் அரங்கில் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வ அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆஸ்கர் விருது பெற்ற "தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்" குறும்பட ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரை பாராட்டும் விதமாகவும் மேலும் தமிழக அரசின் அவ்வையார் விருது பெற்ற 80 வயதை கடந்த புலவர் கமலம் அவர்களையும் பாராட்டும் விதமாக அவர்களுக்கு கௌரவம் செய்யப்பட்டது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Elephant, Local News, Ooty, Oscar Awards