முகப்பு /நீலகிரி /

நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு - கலெக்டர் சொன்ன முக்கிய தகவல்!

நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு - கலெக்டர் சொன்ன முக்கிய தகவல்!

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம்

Nilgiris News | நீலகிரி மாவட்டத்திற்கு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 5 வருடங்களுக்கு ரூ.50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

தமிழ்நாடு பட்ஜெட் 2023-24ல் நீலகிரி மாவட்டத்திற்கு இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 5 வருடங்களுக்கு ரூ.50 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு உலக தண்ணீர் தினத்தன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலமையில் கிண்ணகொரை கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

முதலாவதாக கிராம சபை கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்தல், அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இயற்கை விவசாயம்

பின்னர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முறையான குடிநீர் திட்டத்தினை மேம்படுத்த ரூபாய் 5.45 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் குடிநீர் குழாய்கள் மே மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 3. 85 கோடி ரூபாய் மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டும் இதனைப் விட அதிக அளவு கடன் உதவிகள் வழங்கப்பட்டு தொழில் மேம்படுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேயிலை கிடங்குகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்து உதவி கோவைக்கு மூன்றாவது பாதையான வழித்தடம் மேம்படுத்தப்படும் எனவும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

First published:

Tags: Local News, Nilgiris