முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் பழங்குடியினரின் கைவண்ணப் பொருட்கள்!

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் பழங்குடியினரின் கைவண்ணப் பொருட்கள்!

X
உதகை

உதகை கோத்தகிரி சாலையில் கைவினை பொருட்களை விற்பனை செய்யும் கடை

Ooty Tribal People Handmade Equipments : ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் பழங்குடியினரின் கைவண்ணப் பொருட்கள்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான ஊட்டியிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பழங்குடியினரால் தயாரிக்கப்படும் சோப்பு, ஊதுபத்தி மற்றும் மரத்தால் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடைகளுக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் ஊதுபத்தி நல்ல வாசம் இருப்பதாகவும், அதேபோல் சந்தன மரக்கட்டைகளால் தயாரிக்கப்பட்ட யானை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் வடிவிலான பொம்மைகள் இங்கு விற்கப்படுவதாகவும் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

பழங்குடியினரின் கைவண்ணப் பொருட்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இங்கு விற்கப்படும் பல்வேறு நாட்டு மூலிகை மருந்துகள், சர்க்கரை வியாதி, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளைக் குணமாக்கும் தன்மையுள்ளதாகவும், மேலும் இங்கு விற்கப்படும் நீலகிரி தைலத்திற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty