முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் மிஸ் பண்ணக்கூடாத இடம்..! பழங்குடியினர் வாழ்வியலை தெரிஞ்சிக்க இங்க போங்க..!

ஊட்டியில் மிஸ் பண்ணக்கூடாத இடம்..! பழங்குடியினர் வாழ்வியலை தெரிஞ்சிக்க இங்க போங்க..!

X
பழங்குடியினர்

பழங்குடியினர் அருங்காட்சியகம்

Ooty Tribal Museum : நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் அதிக அளவு வாழ்ந்து வருகின்றனர். 

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகை முத்தோரை, பாலடா அருகே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரிவதில்லை. உள்ளே நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 50 ரூபாயும், 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது .

இங்கு பல்வேறு வகையான பழங்குடியின மக்களின் மாதிரி உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு பழங்குடியினருக்கும் உண்டான சிறப்புகளை இங்கு உள்ள பணியாளர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர் . பின்னர் பழங்குடி மக்களைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கு தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டு அவற்றில் விளக்கமும் அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் பழங்குடி மக்கள் உபயோகப்படுத்திய உபகரணங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்கள் மட்டுமல்லாமல் இங்கு அந்தமான் நிக்கோபார் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை பற்றிய விளக்கமும் இங்கு உள்ளது இந்த அருங்காட்சியகத்தின் மேல் பகுதியில் பல்வேறு வகையான பழங்குடியின மக்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பழங்குடியினர் அருங்காட்சியகம்

இதையும் படிங்க : 30 ரூபாயில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம்..! தென்காசியில் ஒரு நாள் ட்ரிப்புக்கு சூப்பர் ஸ்பாட்..!

இதுபோன்ற வரலாற்று ரீதியாகவும் ,பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கும் இது போன்ற கண்காட்சிகள் ஊட்டியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் பழங்குடியின மக்களைக் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்வாய்ப்பாகவும் இந்த கண்காட்சி இருப்பதாக சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் இந்த அருங்காட்சியகத்தை ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் பார்வையிட வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்

    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty, Travel