நீலகிரி மாவட்டம் ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது அவலாஞ்சி. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத இடம் இதுவாகும். பசுமையும் அழகும் நிறைந்த இந்த இடத்திற்கு பாலடா, இத்தலார், எமரால்டு வழியாக செல்லலாம்.
எமரால்டு அடுத்து உள்ள லாரன்ஸ் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் வனப்பகுதிக்குள் பயணம் செய்து அவலாஞ்சியை அடையலாம், கார் மற்றும் பைக் என சொந்த வாகனத்தில் செல்வது சிறந்தது, அங்கே செல்ல வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளே சென்று பார்க்கிங்கில் வாகனங்கள் நிருத்திவைதுவிட்டு அழகே வடிவான இயற்க்கையுடன் ஒன்றி மெய்மறந்து அனுபவித்து மகிழலாம்.
ஜீப் சஃபாரி:
இங்கே, குரங்குகள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். அவைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் கொண்டு செல்லும் தின்பண்டங்களை கொஞ்சம் பாதுகாக்க தவறினால் அபேஸ் தான். அவலாஞ்சி வனப்பகுதியில் மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அங்கே சஃபாரி செல்ல அங்குள்ள வாகனங்கள் மூலம் மட்டுமே செல்ல முடியும்.
மேலும் படிக்க : ஊட்டியில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க இந்த வழியை பயன்படுத்துங்க..
கண்களுக்கு விருந்து படைக்கும் ஏரியின் அழகு:
இங்கிருக்கும் அணையை சுற்றி பார்த்து ரசிக்க, முதலில் பைன் மரங்கள் நிறைந்த அழகிய குட்டி வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்க ஆங்காங்கே மரங்களால் அமைக்கப்பட்ட இருக்கைகள் உள்ளன. அந்த பகுதியை கடந்து சென்றால் மலைகளின் நடுவே பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் ஏரியின் அழகு உங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.
மேலும் படிக்க : ஊட்டி மலை ரயிலில் பயணிக்க ஆசையா..! இந்த தகவல்களை எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!
அருகே அமைந்துள்ள சிறு சிறு ஒடைகளில் கண்ணாடி போல தெளிவாக சலசலத்து ஓடும் தண்ணீர் சில்லென்று உங்கள் கால்கலை தழுவும் பொழுது, கவலைகள் எல்லாம் மறந்து மனம் குதூகலிக்கும், இந்த நீரேடை ஆர்பாட்டமின்றி காண்பேரை கட்டி இழுக்கும் வல்லமை கொண்டிருப்பதை உணர முடியும்.
நீங்கா நினைவுகளை தரும் இயற்கை அழகு
அங்கிருந்து, சற்று தூரம் நடந்து சென்றால் பரந்து விரிந்து அட்டகாசமாக காட்சியளிக்கும் ஏரியானது மலைகளின் நடுவே அமைதியாய் அமைந்து ஆரவாரமின்றி சுற்றுலா பயணிகளை இன்பத்தில் ஆழ்த்தும். இத்தனை அழகு மிக்க ஏரியை கண சுற்றுலா பயணிகள் இங்கு வந்தால் இயற்கையின் அழகை மன நிறைவாக அனுபவித்து திரும்பலாம்.
மேலும் படிக்க : ஊட்டியில் புதுமணத்தம்பதியரை கவரும் தேயிலை பூங்கா.. இங்க என்ன ஸ்பெஷல்?
இவ்வாறு எப்போதும் இதயத்தில் தங்கியிருக்கும் பசுமையான நினைவுகளை கொடுக்க காத்திருக்கிறது இந்த அவலாஞ்சி. இந்த அவலாஞ்சி பகுதியில் உள்ள மற்ற சுற்றுலா இடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நியூஸ் 18 உள்ளூர் தளத்துடன் இணைந்து இருங்க.. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris, Ooty