முகப்பு /நீலகிரி /

உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் உலகின் முதல் நூல் பூங்கா.. இங்கு என்ன ஸ்பெஷல் தெரியுமா?

உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் உலகின் முதல் நூல் பூங்கா.. இங்கு என்ன ஸ்பெஷல் தெரியுமா?

X
உதகையில்

உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் உலகின் முதல் நூல் பூங்கா

Ooty Thread Garden : நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் உலகின் முதல் நூல் பூங்கா.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான உதகையில் அனைவரும் அறிந்த பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்து வருகிறது. இருப்பினும் உதகை படகு இல்லம் அருகே அமைந்துள்ள இந்த நூல் பூங்காவை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த நூல் பூங்காவானது உலகிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட நூல் பூங்காவாகும். இந்த பூங்காவில் புல் செடிகள் தாமரைக் குளம் உள்ளிட்டவை தத்ரூபமாக இயற்கையாக அமைந்துள்ளது போல் நூல்களால் அமைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு ஊசி, இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் இன்றி கையால் 12 வருட உழைப்பின் அழகிய வெளிப்பாடு இந்த நூல் பூங்கா, ஆண்டனி ஜோசப் என்பவரின் முயற்சியால், யூனிக் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ல் இல் இடம் பெற்றுள்ளது.

உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் உலகின் முதல் நூல் பூங்கா

இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை பிரம்மிப்புடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இந்த பூங்காவில் உள்ள நூல்களை சுற்றுலா பயணிகள் இறுதியாக தொட்டுப் பார்த்து அனுபவிக்கவும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty