முகப்பு /நீலகிரி /

பொம்மை நடனம்.. ஊட்டியில் டோல் இசையுடன் களைகட்டிய திருவிழா!

பொம்மை நடனம்.. ஊட்டியில் டோல் இசையுடன் களைகட்டிய திருவிழா!

X
ஊட்டியில்

ஊட்டியில் டோல் இசையுடன் களைகட்டிய திருவிழா

Ooty Temple Festival : நீலகிரி மாவட்டம் உதகையில், ராஜகாளியம்மன் அவதாரத்தையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்த பக்தர்கள்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவில் நடன நிகழ்ச்சி மற்றும் டோல் இசையை நிகழ்ச்சிகளை பக்தர்கள் கண்டு களித்தனர்.

கொடியேற்றத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா பக்தர்கள் வெள்ளத்தின் மத்தியில் நடைபெற்றது. நீலமலை தெய்வீக நற்பணி மன்றத்தின் சார்பில் 20 ஆம் நாளில் இந்த தேர் திருவிழா பவனி நடைபெற்றது.

காலை முதலே சிறப்பு யாகங்கள் பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்று மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்பட்டது. கேடய வாகனத்தில் ராஜகாளியம்மனாக வந்த அவதாரத்தை காண்பதற்காக பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முன்னதாக தேரின் முன்னர் பொம்மை வேஷம் கட்டி நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சி மற்றும் டோல் இசை உள்ளிட்டவை பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. நகரின் பிரதான வீதிகள் வழியாக உலா வந்த தேர் மீண்டும் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மன் தரிசனம் பெற்று சென்றனர்.

First published:

Tags: Local News, Nilgiris, Ooty