முகப்பு /செய்தி /நீலகிரி / ஊட்டி பிளஸ் டூ விவகாரம் : மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட கல்வி அலுவலர் நம்பிக்கை

ஊட்டி பிளஸ் டூ விவகாரம் : மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட கல்வி அலுவலர் நம்பிக்கை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனி தனியாக விசாரணை நடத்தினர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை அருகே அரசு உதவி பெறும் பள்ளியின் 34 மாணவர்களின் +2 தேர்வு முடிவில் கணித பாட மதிப்பெண் வழங்காமல் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள விவகாரத்தில் மாணவர்களின் நலன் கருத்தி நல்ல முடிவெடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 27-ந்தேதி நடைபெற்ற +2 கணித பொதுத்தேர்வின் போது உதகை அருகே உள்ள சம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கண்காணிப்பாளர்கள் உதவியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நேற்றுமுன்தினம் வெளியான +2 தேர்வு முடிவில் அப்பள்ளியை சேர்ந்த 34 மாணவர்களுக்கு கணித பாடத்தின் மதிப்பெண் வழங்கபடாமல் தோல்வி அடைந்ததாக வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி தலைமையில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள 34 மாணவர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர் லதா, தற்போதைய தலைமை ஆசிரியர் ரகுநாதன்  மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேர்வு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் தனி தனியாக விசாரணை நடைபெற்றது.

இதையும் படிங்க: தமிழில் 100க்கு 138 மார்க்.. 514 வாங்கியும் 4 பாடங்களில் ஃபெயில்.. பிளஸ் டூ மதிப்பெண் சர்ச்சை

 மேலும் கணித தேர்வில் உதவிய 2 மாணவிகள் மற்றும் அவர்களது தாயாரும் அப்பள்ளி கணிதம் மற்றும் தமிழ் பாட ஆசிரியைகளையும் விசாரித்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்து பேட்டியளித்த அவர், நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி 34 மாணவர்கள், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர், தற்போதைய தலைமை ஆசிரியர் உள்பட சம்பந்தபட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தியதாகவும் அதன் அறிக்கையை சென்னையில் உள்ள தேர்வு துறைக்கு கொண்டு செல்லபடும் என தெரிவித்தார்.

மேலும் சர்ச்சைக்கு உரிய 2 மாணவர்களை தவிர மற்ற 32 மாணவர்களுக்கு கணித பாடத்தின் மதிப்பெண் வழங்குவது குறித்து தமிழக அரசு நல்ல முடிவெடுக்கும் என்று கூறிய அவர் எனவே அச்சபட தேவையில்லை என்றார்.

top videos

    செய்தியாளர் : அய்யாசாமி ( ஊட்டி)

    First published:

    Tags: Public exams