முகப்பு /நீலகிரி /

உதகை சவுத்விக் பகுதி சாலை சேதம்.. பொதுமக்கள் அவதி!

உதகை சவுத்விக் பகுதி சாலை சேதம்.. பொதுமக்கள் அவதி!

X
சேதமடைந்த

சேதமடைந்த சாலை

ooty road damage | உதகையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை சவுத் வீக் பகுதியில் இருந்து எச். எம்.டி வரை செல்லக்கூடிய சாலையானது அதிக அளவு தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கொண்ட சாலை ஆகும்.

இந்த சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதை வாசிகள் சென்று வருகின்றனர் குறிப்பாக இங்கு நியாய விலை கடை அமைந்துள்ளதால் உள்ளூர் வாசிகளின் அதிக அளவு இந்த சாலையை உபயோகப்படுத்தி வருகின்றனர்.

மேலும் தற்போது கோடை சீசன் துவங்கியதால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் இவ்வழியாக சென்று வருகிறது இத்தகைய அதிகமாக உபயோகப்படுத்தப்படும் சாலையானது பாதாள சாக்கடை பணிகளுக்காக கடந்த சில நாட்களுக்கு முன் தோண்டப்பட்டதாகவும்,பின்னர் தற்போது வரை அந்த சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் உள்ளூர்வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் குற்றசாட்டுகின்றனர்.

மேலும் தற்போது அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருவதால்,மழை பெய்யும் பொழுது அப்பகுதி மிகவும் சேரும், சகதியாகவும் காட்சியளித்து வருகிறது எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கே ஆளாகி வருகின்றனர் எனவே நகராட்சி நிர்வாகம் இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Lack of road facility, Local News, Ooty