முகப்பு /நீலகிரி /

நீலகிரி தாவரவியல் பூங்கா அருகே இப்படி ஒரு கடையா? குறைந்த விலையில் காபி, டீ, சாக்லேட்!

நீலகிரி தாவரவியல் பூங்கா அருகே இப்படி ஒரு கடையா? குறைந்த விலையில் காபி, டீ, சாக்லேட்!

X
காவலர்

காவலர் கேண்டீன்

Ooty Police canteen | உதகையில் உள்ள காவலர் கேண்டீனில் உள்ள சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

தமிழ்நாடு அரசு காவல்துறையின் சார்பாக நீலகிரி மாவட்டம் உதகையில் காவலர் கேண்டீன் செயல்பட்டு வருகிறது . உதகை B1 காவல் நிலையம் மற்றும் அரசு தாவரவியல் பூங்கா அருகே செயல்பட்டு வரும் , இந்த காவலர் கேண்டீனில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக டீ, காபி மற்றும் உதகை வருக்கி, சாக்லேட் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

இந்த கேண்டீனில் சிறப்பு என்ன வென்று பார்த்தால் மற்ற உணவகங்கள் மற்றும் கடைகளை காட்டிலும் இங்கு டீ ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காபி 10 சாக்லேட் 100 வர்க்கி 80 அரை கிலோ டீதூள் முதல் தரம் 200 விற்கப்படுகிறது.மேலும் வடை உள்ளிட்டவையெல்லாம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

சுற்றுலா தளங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள இந்த காவலர் கேண்டீனில் இவ்வாறு குறைந்த விலைக்கு விற்பனை செய்வது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Nilgiris, Ooty, Tea, Tourist spots