முகப்பு /நீலகிரி /

இனி மலேசியா போக வேண்டாம்.. உதகையிலும் ஒரு மலேசியா முருகன்!

இனி மலேசியா போக வேண்டாம்.. உதகையிலும் ஒரு மலேசியா முருகன்!

X
மலேசிய

மலேசிய முருகன் - உதகை முருகன்

Oory murugan temple | மலேசியாவில் உள்ள முருகர் சிலையின் வடிவத்தில் உதகையிலும் முருகர் சிலை அமைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

உதகை எல்ஹில் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தமிழ்நாட்டில் உயரமான இடத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த கோவிலானது மான் குன்றம் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவிலுக்கு முருகனுக்கு உகந்த தினங்களான தைப்பூசம், சஷ்டி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முற்றிலும் மலைகள் மற்றும் வனப்பகுதிகளை கொண்ட இக்கோயிலில் காண்பதற்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் 40 அடிக்கு முருகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் சிறப்பு அம்சங்கள் மலை மேல் அமைந்திருக்கும் இந்த சிலை மலேசியாவில் அமைக்கப்பட்டுள்ள முருகர் சிலையின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மலைகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் உதகை நகரில் ஒரு சில பகுதிகளில் இருந்து பார்த்தால் இந்த இலை மிகவும் தெளிவாக தெரியும். மேலும் கோவிலுக்கு செல்லும் வழி எங்கிலும் தேயிலை தோட்டங்கள் அமைந்திருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது.

First published:

Tags: Murugan temple, Nilgiris, Ooty