நீலகிரி மாவட்டம் உதகையில் பிரசித்தி பெற்ற கோவிலான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா துவங்கியுள்ளது. சுற்று வட்டாரங்களில் உள்ள ஏராளமான கிராமப் பகுதிகளை சேர்ந்த மற்றும் நகர் பகுதிகளை சேர்ந்த மக்களும் இந்த தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு தேர் திருவிழா விமர்சையாக நடைபெறும்.
36 நாட்கள் நடைபெறும் இந்த தேர் திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அவதரித்து தேர் பவனி ஆனது நகரின் பிரதான வீதிகள் ஆன லோயர் பஜார் உதகை பேருந்து நிலையம் மெயின் பஜார் உள்ளிட்ட வழியாக மீண்டும் மாரியம்மன் கோவிலை வந்தடையும்.
18.04.2023 அன்று தேவஸ்தானம் சார்பில் சித்திரை தேர்பவனி நடைபெற உள்ள நிலையில் எந்தெந்த நாட்களில் எந்தெந்த சாமி அலங்காரம் என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்
உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
- 20:03:2023 : புலி வாகனத்தில் ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன்
- 21:03:2023 : ரதம் வாகனத்தில் துர்க்கை அம்மன்
- 22:03:2023 : கேடயம் வாகனத்தில் பராசக்தி அம்மன்
- 23:03:2023 : கமல வாகனத்தில் காமாட்சி அம்மன்
- 24:03:2023 : சேஷ வாகனத்தில் ஆதிபராசக்தி அம்மன்
- 25:03:2023 : கேடயம் வாகனத்தில் முத்து பல்லாக்கு அலங்காரம்
- 26:03:2023 : கேடயம் வாகனத்தில் தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் அலங்காரம்
- 27:03:2023 : ரதம் வாகனத்தில் புஷ்ப பல்லாக்கு அலங்காரம்
- 28:03:2023 : கேடயம் வாகனத்தில் சிக்கமன் அலங்காரம்
- 29:03:2023 : கேடயம் வாகனத்தில் ஸ்ரீ மாளிகைபுரத்து அம்மன்
- 30:03:2023 : கேடயம் வாகனத்தில் ஸ்ரீ அம்பா பவானி அம்மன்
- 31:03:2023 : ரதம் வாகனத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன்
- 01:04:2023 : கேடயம் வாகனத்தில் ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம்
- 02:04:2023 : அன்னம் வாகனத்தில் ஸ்ரீ மூகாம்பிகை அலங்காரம்
- 03:04:2023 : கேடய வாகனத்தில் ஸ்ரீ கொடுங்காளூர் அலங்காரம்
- 04:04:2023 : சேஷ வாகனத்தில் ஸ்ரீ வடிவாம்பிகை அலங்காரம்
- 05:04:2023 : சிம்மம் வாகனத்தில் ஸ்ரீ திரிசூலநாயகி அலங்காரம்
- 06:04:2023 : பூப்பல்லாக்கு வாகனத்தில் ஸ்ரீ அபிராம சுந்தரி அலங்காரம்
- 07:04:2023 : கேடய வாகனத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அலங்காரம்
- 08:04:2023 : கேடயம் வாகனத்தில் ஸ்ரீ ராஜகாளியம்மன் அலங்காரம்
- 09:04:2023 : கேடயம் வாகனத்தில் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் அலங்காரம்
- 10:04:2023 : காமதேனு வாகனத்தில் ஸ்ரீ ஹெத்தை அம்மன் அலங்காரம்
- 11:04:2023 : கேடயம் வாகனத்தில் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரம்
- 12:04:2023 : கேடயம் வாகனத்தில் ஸ்ரீ அங்காளம்மன் அலங்காரம்
- 13:04:2023 : பூதம் வாகனத்தில் திருவளர் நாயகி அலங்காரம்
- 14:04:2023 : சிம்மம் வாகனத்தில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அலங்காரம்
- 15:04:2023 : காலை வாகனத்தில் ஸ்ரீ தையல்நாயகி அலங்காரம்
- 16:04:2023 : வேப்பிலை ரதத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் அலங்காரம்
- 17:04:2023 : குதிரை வாகனத்தில் ஸ்ரீ பகவதி அம்மன்
- 18:04:2023 : மாரியம்மன் திருத்தேர் திருவிழா
- 19:04:2023 : வெள்ளை குதிரை வாகனத்தில் ஸ்ரீ நீலாம்பிகை அம்மன்
- 20:04:2023 : ஊஞ்சல் உற்சவம் ஸ்ரீ கண்ணாடி பல்லக்கு
- 21:04:2023 : அம்மன் விடையாற்றி உற்சவம் என தொடர்ந்து 36 நாட்களும் உதகை நகரே விழா கோலமாக காட்சியளிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.