முகப்பு /நீலகிரி /

ஊட்டி மாரியம்மன் கோவிலில் 2ம் நாள் திருவிழா...  மேள தாளங்கள் முழங்க பவனி வந்த அன்னை!..

ஊட்டி மாரியம்மன் கோவிலில் 2ம் நாள் திருவிழா...  மேள தாளங்கள் முழங்க பவனி வந்த அன்னை!..

X
ஊட்டி

ஊட்டி மாரியம்மன்

Ooty News | தேர் பவனியை காண்பதற்கு வழி நெடுகிலும் பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருத்தேர் பவனியில் இரண்டாவது நாளில் துர்க்கை அம்மன் அலங்காரத்தில் தேர்பவணி நடைபெற்றது.

உதகை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர் பவனி நடைபெறும். அதன் ஒரு பகுதியாக மார்ச் 21ஆம் தேதி துர்க்கை அம்மன் அலங்காரத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது. காலை முதல் பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்று மதிய வேளையில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின்னர் மாவிளக்கு பூஜைகளுடன் அலங்கரிக்கப்பட்டு மாலையில் மேள தாளங்கள் முழங்க தேர் பவனி உதகை பிரதான வீதிகள் ஆன லோயர் பஜார் உதகை மத்திய பேருந்து நிலையம் மெயின் பஜார் வழியாக கோவிலை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேர் பவனியை காண்பதற்கு வழி நெடுகிலும் பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். மேலும், பிரதான வீதிகளில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும், சுவாமியை வழிபட்டு சென்றனர். ஜமாப் இசையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் உற்சாக நடனமாடி திருத்தேர் பவனியின் முன் குதூகளித்துச் சென்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Ooty