முகப்பு /நீலகிரி /

தமிழகத்தின் Dangerous பகுதி.. ஊட்டி கல்லட்டி மலை பாதை தெரியுமா?

தமிழகத்தின் Dangerous பகுதி.. ஊட்டி கல்லட்டி மலை பாதை தெரியுமா?

X
7

7 ஆண்டுகளில் 20 உயிர்பலி 117 படுகாயங்கள் 

Ooty Kallatti Road | ஊட்டி கல்லட்டி மலைப்பாதையில் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டு வாகனங்களைஎப்படி இயக்க வேண்டும் என அறிவுறுதப்பட்டு உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

கல்லட்டி மலைப்பாதை சாலையில் விபத்துக்கள் என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும்20 உயிர்களை காவு வாங்கியிருக்கிறது ஊட்டிகல்லட்டி சாலை.அப்படி இந்த சாலையில் என்ன உள்ளது?

36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த சாலை பகல் நேரங்களில் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும் உதகையிலுருந்து, மசினகுடிசெல்லும் வாகனங்கள் தலைக்குந்தா சோதனை சாவடியில் சோதிக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் தான்என்று உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

இந்த சாலை மிகவும் அபாயகரமான வளைவுகள் மற்றும் இறக்கமான பாதைகள் கொண்டது இதனால் வாகனங்கள்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகின்றன. இந்த பாதையில் ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டு வாகனங்களைஎப்படி இயக்க வேண்டும் என அறிவுறுதப்பட்டு உள்ளது

இருப்பினும் வாகனங்கள் கட்டுப்பட்டை இழந்து பிரேக் டவுன் ஆவது அன்றாட நிகழ்வாக உள்ளது.கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 42 விபத்துளில் 20 உயிரிழப்புக்கள் உட்பட117 பேருக்கு படுகாயங்கள்ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் உதகையிலிருந்து மசினகுடி செல்வதற்கு இந்த பாதையை தவிர்த்துவிட்டுகூடலூர் பாதையை உபயோகிப்பது பாதுகாப்பானது ஆகும்.

First published:

Tags: Accident, Local News, Nilgiris, Ooty, Tourist spots