முகப்பு /நீலகிரி /

ஊட்டியில் கடும் துர்நாற்றத்துடன் தெருக்களில் பாய்ந்தோடும் கழிவுநீர்..

ஊட்டியில் கடும் துர்நாற்றத்துடன் தெருக்களில் பாய்ந்தோடும் கழிவுநீர்..

X
ஊட்டி

ஊட்டி

ooty : நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் பாய்ந்தோடுகிறது.

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்க்ஹில் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் பாய்ந்தோடுகிறது. இதனால், மாணவர்களும் அப்பகுதி மக்களும் மூக்கை பொத்திக்கொண்டு செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாதாள சாக்கடை கழிவுநீரானது அவப்போது, சாலை எங்கிலும் கட்டுக்கடங்காமல் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், காலை வேளையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையிலும், மூக்கை பொத்திக் கொண்டு செல்கின்றனர்.

ஊட்டி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

இந்த சாலை புதிதாக அமைக்கப்பட்டது என்பதால், தொடர்ந்து இவ்வாறு பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் ஓடுவதன் மூலம் சாலை மீண்டும் சேதமடையும் அபாயமும் இருக்கிறது. குடியிருப்பு பகுதிகளின் நிறைந்த இந்த பகுதியில், துர்நாற்றத்துடன் பாதாள சாக்கடை கழிவுநீர் செல்வதால் நோய் தொற்று அபாயமும் இருந்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பாதாள சாக்கடை அடைப்பு சீரமைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அடைப்பு ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Nilgiris, Ooty