நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மலைகளின் அரசியாக விளங்குகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனா்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சா்வதேச அளவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஒவ்வொரு ஆண்டும் ஈர்த்து வருகிறது இந்த பூங்காவில் மே 19ம் தேதி முதல் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவை அழகுப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தற்போது இறுதி கட்ட பணிகளாக குடில்கள் அமைப்பது, நுழைவு வாயில்களில் வர்ணம் பூசுவது, கலையரங்கங்கள் அமைப்பது, தொட்டிகளில் உள்ள பூக்களை பராமரிப்பது மற்றும் புல்வெளிகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வரும் புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை தெரிவித்தால் அலுவலகத்தில் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் எனவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Nilgiris