முகப்பு /செய்தி /நீலகிரி / உதகை மலர் கண்காட்சியை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

உதகை மலர் கண்காட்சியை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

மாதிரி படம்

மாதிரி படம்

Ooty Flower Show 2023 | உதகையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற 125வது மலர் கண்காட்சி மே மாதம் 19  முதல் 23 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 

  • Last Updated :
  • Udhagamandalam (Ooty), India

சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் கோடை சீசனாகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை காணவும் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.  அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தோட்டக்கலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடத்தப்படும். இதன்படி இந்த ஆண்டு  வருகின்ற மே மாதம் 6ம் தேதி கோடை விழா தொடங்குகிறது.  முதல் நிகழ்வாக மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சியும், மே 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் 10வது வாசனை திரவிய கண்காட்சியும், மே 13,14 மற்றும் 15-ம் தேதிகளில் 18-வது ரோஜா கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

மேலும் உதகையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் மே மாதம் 19  முதல் 23 வரை 5 நாட்கள் நடைப்பெறுகிறது.   மே 27 , 28 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சி நடத்த தோட்டகலை துறை முடிவு செய்துள்ளது.  இந்த கண்காட்சிகளில் பல்வேறு வடிவங்கள் மற்றும் உதகை உருவாகி 200 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு பல்வேறு காட்சிகளும் நடத்தப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

top videos
    First published:

    Tags: Ooty